"பசும்பொன் தேவர் பெருமகனாரும் பத்மஸ்ரீ சிவாஜிகணேசனும்"
திருச்சி ரெத்தினவேல் இல்லத்தில் பசும்பொன் பெருமகனார் உடல் நலம் குன்றியிருந்த போது ஒய்வுக்காகவும் வைத்தியம் மேற்கொள்ளவும் தங்கியிருந்தார். அந்நேரம் திருச்சியில் நடந்த ஒரு நாடக நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வந்திருந்தார். நாடகம் முடிந்த நிலையில் பசும்பொன் பெருமகனார் திருச்சியில் தங்கியிருக்கும் செய்தி அறிந்து அவரைச் சந்திக்க வேண்டும் என்று விருப்பப்பட்டு பெருமகனார் தங்கியிருக்கும் வீட்டுக்குச் செல்கிறார்.
தான் வந்திருப்பதாகவும் பெருமகனாரைக் காண அனுமதியும் வேண்டும் என்று பெருமகனாரின் உதவியாளரிடம் சொல்லி அனுப்புகிறார்.
"என்னைப் பார்க்க சிவாஜி கணேசனுக்கு அனுமதி என்ன வேண்டியிருக்கிறது? வரச்சொல் என்று பெருமகனார் சொன்னார். சிவாஜி கணேசன் உள்ளே வந்ததும்...
தன் நடிப்பால் தான் வெளிப்படுத்தாத ஒரு கதாபாத்திரத்தை தெய்வ சொரூபமாய் தென்பட்ட பெருமகனாரை நேரில் கண்டதும் சிவாஜி கணேசன் ஒரு கணம் எதுவும் புரியாதவராய் திகைத்து நிற்கிறார்.
"என்ன தம்பி அப்படி பார்க்கிறீர்கள்?" என்றதும் தன்னிலை உணர்ந்த சிவாஜி கணேசன் அப்போதுதான் "வணக்கம்" என்றார்.
"வாங்க வந்து இப்படி உட்காருங்கள்" என்று பெருமகனார் பற்றுடன் அழைத்துத் தன் அருகே அமரச் செய்து...
"வடக்கே எல்லோரும் உங்களைப் பற்றி பெருமையாகப் பேசுகிறார்கள். உங்கள் அளவுக்கு நடிகரே இல்லை என்று ஆச்சரியப்படுகிறார்கள் என்று ஒரு சாதாரண ரசிகனின் நிலையில் பெருமகனார் சொல்ல
வெள்ளைக்கார அரசாங்கமே மிரண்டு கிடந்த செயல்பாடுகளைக் கொண்ட ஒரு மாமனிதரா தன்னைப் பற்றி இப்படி சிலாகித்துப் பேசுவது என்று சிவாஜி கணேசனுக்கு ஆச்சரியம் மேலிடுகிறது.
"ஐயா இந்த தேசத்திற்கும், ஆன்மிகத்திற்கும் நீங்கள் ஆற்றிக் கொண்டிருக்கும் பணியும் சேவையும் உலகமே அறியும். அப்படிப்பட்ட உங்களைப் பல காலமாகப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஆனால் காலம் இப்பொழுது தான் இடம் கொடுத்திருக்கிறது. உங்களுக்கு ஏதாவது என்னால் ஆன உதவியைச் செய்ய வேண்டும் என்று என் மனம் விரும்புகிறது. நான் என்ன செய்யட்டும்?" என்று கேட்க...
"தம்பி நீங்கள் இப்போது இருக்கும் இடத்தில் (காங்கிரஸ்) வாழ்நாள் முழுவதற்கும் காங்கிரஸ்க்கும் காமராஜருக்கும் தொண்டராகவே உண்மையாக இருங்கள். காலம் எங்களை மாற்றி இருந்தாலும் நீங்கள் மாறாமல் இருங்கள். இது நம் இனத்துக்கும் பெருமை சேர்க்கும் மேலும் எனக்கு செய்யும் பரோபகாரமும் ஆகும்" என்றார்.
1967-ல் ஆட்சி மாற்றத்திற்குப் பின் எத்தனையோ இடர்பாடுகள் வந்தாலும் சிவாஜி கணேசன் காமராஜரின் உயிர் உள்ளவரையும் அவரின் ஆத்மார்த்தமான தொண்டராகவே இருந்து வந்தார்.
அரசியலில் காங்கிரசும் பார்வர்ட் பிளாக்கும் பெருமகனாரும் காமராஜரும் வேறு வேறு திசையில் இருந்தாலும் தன்னை தனக்காக பயன்படுத்திக்கொள்ளும் எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் இப்படி சொன்னதை எண்ணி வியந்து போகிறார் சிவாஜி கணேசன்.
அப்பொழுது உதவியாளர் கொடுத்த தேனீர் உபசரிப்புக்குப் பிறகு அரசியல் பற்றி பெருமகனாரும் சினிமா பற்றி சிவாஜி கணேசனும் மணிக்கணக்கில் பேசி பிரிய மனமில்லா நிலையில் விடை பெற்றுப் போகிறார் சிவாஜி கணேசன்...
1963-ல் காலம் பெருமகனாரை பூமியிலிருந்து பிரிந்துவிட்ட நேரம் அப்போது அமெரிக்க ஜனாதிபதி கென்னடி அழைப்பின் பேரில் அமெரிக்க சென்றிருந்த சிவாஜி கணேசன் பெருமகனாரின் இறப்பு செய்தி கேட்டு கலங்கிப்போனார். அங்கு அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் சோகமாகவே காணப்பட்டார்.
சிவாஜி கணேசன் நாடு திரும்பியபோது விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு போன் செய்து தனக்கு ஒரு வேட்டியும் சட்டையும் கொண்டுவரச் சொன்னார். வீட்டிலுள்ளவர்களுக்கு என்னவென்ற விவரம் புரியவில்லை. பாராட்டு விழாவில் கலந்து கொள்ள தஞ்சையிலிருந்து அவரது தாயார் ராஜாமணி அம்மாள் அவர்கள் வந்திருந்தார்கள்.
எத்தனையோ வரவேற்புகள் காத்திருந்தன. தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் மிகப் பிரமாண்டமான பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போதைய நடிகர் சங்கத் தலைவர் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் தனக்காக காத்துக் கொண்டிருப்பதை வீட்டார் மூலம் அறிந்த சிவாஜி கணேசன் நடிகர் சங்கத்துக்கு வந்து திரு. எம்.ஜி.ஆர் அவர்களிடம் மட்டும் மாலையைப் பெற்றுக் கொண்டு நடிகர் சங்க மேக்அப் அறையில் கோட்சூட் இருந்து வேட்டி சட்டைக்கு மாறி அங்கிருந்து நேராக பசும்பொன்னில் நடைப்பெற்ற பெருமகனாரின் 16-ம் நாள் காரியத்தில் கலந்துகொள்ளச் சென்றா...
பெருமகனாருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று சிவாஜி கணேசன் கேட்டது தன் மனதில் கணத்துக் கொண்டிருந்தது.
மறவர்களின் முகத்துவாரப் பகுதியான ஆப்பனூரில் பெருமகனாருக்கு ஆளுக்கு மேலுயர வெண்கலச் சிலையை தன் சொந்தச் செலவில் நிறுவி தன் மன கணத்தை நீக்கிக் கொண்டார் சிவாஜி கணேசன். அச்சிலையை அப்போதைய கவர்னர் திரு. மோகன்லால் சுகாதியா திறந்து வைத்தார்.
இச்சிலை நிறுவப்பட்டதைப் பற்றி ஒரு சிறு விபரம்:
சிவாஜி கணேசனின் திவிர ரசிகரான ஆப்பனூரைச் சேர்ந்த வெற்றிமாலை கோவிந்தத் தேவர் என்பவர் சிவாஜி கணேசன் நடித்து வெளிவரும் ஒவ்வொரு படத்தையும் பார்த்துவிட்டு நேரிடையாக சென்னை சென்று அவரிடம் விமர்சித்து பேசுவது வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
அப்போது சிவாஜி கணேசன் அவர்கள் "நான் பார்த்த ரசிகர்களிலேயே நீ ஒருவன்தான் பளிச்சென்று தெரிகிறாய் பல விஷயங்களைக் கூறுகிறாய். உனக்கு நான் ஏதாவது செய்ய வேண்டுமே" என்று கேட்கிறார்.
வெற்றிமாலை கோவிந்தத் தேவர் "நீங்கள் நன்றாக இருந்தால் போதும் எனக்கு ஒன்றும் வேண்டாம்" என்று கூறிவிடுகிறார்.
அதற்கு சிவாஜி கணேசன் " ம்... நீ சொந்தக்காரப் பய அதனால ஒண்ணும் வேணாங்கிரியாக்கும்" என்று கூறி அனுப்பி வைக்கிறார்.
பெருமகனார் மறைவுக்குப் பிறகு சிவாஜி கணேசன் பெயர் நம் பகுதியில் காலம் முழுவதும் இருக்கு வேண்டும் என்ற எண்ணத்தில் வெற்றிமாலை கோவிந்தத் தேவர் அவர்கள் சிவாஜி கணேசனிடம் சென்று "ஐயா நான் வரும்போதுதெல்லாம் என்ன வேண்டும் என்று கேட்பீர்களே இப்போது நான் ஒன்று கேட்கிறேன் செய்வீர்களா???" என்றார்.
அதற்கு சிவாஜி கணேசன் "வாய்யா சொந்தக்காரா கேளுய்யா என்னய்யா செய்யணும்? கேளுய்யா" என்றார்.
"எங்கள் ஊர் ஆப்பனூரில் தேவர் பெருமகனார் சிலையை நிறுவ வேண்டும். அதற்கு நீங்கள் உதவ வேண்டும்" என்று கேட்க அதற்கு சிவாஜி கணேசன் "இது உன் சொந்த விஷயம் இல்லையே பொதுவாக கேட்கிறாய் இருந்தாலும் நானும் தேவர் அய்யா அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை அந்த சிலையை நிறுவ என்ன செலவானாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்று சொல்லூகிறார்.
அதற்கு வெற்றிமாலைத் தேவர் "சிலை ஏற்பாடு செய்தால் மட்டும் போதாது சிலை திறப்பு விழாவுக்கு நீங்கள்தான் தலைமை தாங்க வேண்டும்" என்று கேட்டதன்படி.
26.5.1975-ல் பெருமகனார் சிலை நிறுவ இராமநாதபுரம் ராஜா காசிநாததுரை அவர்கள் தலைமையில் புதுக்கோட்டை ராஜா விஜய ரகுநாத தொண்டடைமான் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.
அதன்படி சிலை அமைத்து தேவர் பெருமகனார் சிலையை திரு. சிவாஜி கணேசன் தலைமையிலும் தமிழக அரிஜன நலத்துறை முன்னாள் மந்திரி திரு. கக்கன் முன்னிலையிலும் தமிழக கவர்னர் திரு. மோகன்லால் சுகாதியா அவர்கள் திறந்து வைத்தார்.
அப்பிரமாண்ட சிலை திறப்பு விழாவில் தேவர் பெருமகனாரின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் வீற்றிருந்த திரு. பி.கக்கன் அவர்களைப் பார்த்து மக்கள் பலத்த எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
இந்த பதட்டமான சூழ்நிலையில் மேடை ஏறிய சிவாஜி கணேசன் பெருமகனாரின் தொண்டர்களைப் பார்த்து கையால் வாயை பொத்தி சைகை காண்பித்து தலைக்கு மேல் இரு கரம் கூப்பி அமைதி காக்கும்படி சைகை காட்டினார். தன் சொந்தம் சைகை காட்டுவதைப் பார்த்து பொங்கிய கடல் அலைபோல் இருந்த ஜன சமுத்திரம் அமைதி காத்து தரையில் அமர்ந்தது
இந்த எதிர்ப்பு சம்பவம் நடப்பதற்கு காரணம் என்னவென்றால் 1957-ல் இராமநாதபுரம் பகுதியில் உள்ள அரிஜன கிராமங்களுக்கு சென்று "நீங்கள் மறவர்களை எதிர்த்து கலவரம் செய்யுங்கள் அவர்களது உடமைக்குத் தீ வையுங்கள் வெட்டுக்குத்துக்களை நிகழ்த்துங்கள் போலீஸ் உங்கள் மீது நடவடிக்கை எடுக்காது அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் உங்களுக்கு பக்கபலமாக நானிருக்கிறேன். என்று திரு. பி.கக்கன் துர்பிரச்சாரம் செய்ததன் காரணமாகதான் முதுகுளத்தூர் கலவரம் ஏற்பட்டது. இந்த நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டும் நேரில் பார்த்தும் சொல்லக் கேட்டும் இருந்த மறவர் கூட்டம்தான் சிலை திறப்பு விழாவில் எதிர்ப்பைக் காட்டியது.
1957-ல் சட்டப்பேரவையில் காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது திரு. கக்கனிடம் நேரடியாக அரிஜனங்களை கலவரத்துக்கு தூண்டியது பற்றி கேள்வி கேட்கப்பட்ட போது அவரால் பதில் சொல்லமுடியாமல் தடுமாறினார்.
தேசியமும் தெய்வீகமும் இரு கண்களாக பாவித்த தேவர் பெருமகனார் அரசியலில் புனிதம் காட்ட வந்த தெய்வம் மனிதரில் மகான்...